இளம்பெண் தற்கொலை காதலன் பிடிபட்டார்

பூந்தமல்லி: வளசரவாக்கம், பழனியப்பா நகரை சேர்ந்தவர், ராமகிருஷ்ண ராவ்(53), இவர் சினிமா துறையில் கேமரா மேனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் அரிதா ராஜேஸ்வரி(25), பட்டப்படிப்பு முடித்த இவர் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்து கொண்டு மாணவர்களுக்கு டியூஷன் எடுத்த வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் அரிதா ராஜேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட அரிதா ராஜேஸ்வரி செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: அரிதா ராஜேஸ்வரிக்கு சமூக வலை தளம் வாயிலாக மதுமோகன்(35), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.  

இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அரிதா ராஜேஸ்வரியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகிய பின் மது மோகன், அரிதா ராஜேஸ்வரியை தொடர்பு கொள்ளாமல் இருந்துள்ளார்.  மேலும் அவரின் செல்போன் எண்ணையும் பிளாக் செய்துள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்த அரிதாராஜேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மது மோகனை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் வளசரவாக்கம் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: