பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை திமுக ஒன்றிய நிர்வாகிகள் அறிவிப்பு

பள்ளிப்பட்டு: திமுக 15வது அமைப்புத் தேர்தல் நடைபெற்று வருகிறது. பேரூர், நகர நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஒன்றிய நிர்வாகிகள் திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றிய செயலாளர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  அதன்படி பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய செயலாளராக ஜி.ரவீந்திரா, அவைத் தலைவராக எம்.கே.சுப்பிரமணியம், ஒன்றிய துணை செயலாளர்களாக பி.தேவராஜன், எஸ்.குருநாதன், என்.நதியா நாகராஜன், மாவட்ட பிரதிநிதிகள் கே.கோவிந்தசாமி, டி.அன்பழகன், பொன்.சு,பாரதி, ஏ.கோபி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய செயலாளராக வழக்கறிஞர் சி.ஜெ.சீனிவாசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அவைத் தலைவராக திருமலை லோகநாதன் ஒன்றிய துணை செயலாளர்களாக டி.ஆர்.வெங்கடபெருமாள், கே.ஆஞ்சிநேயன், என்.சுகுணா, ஒன்றிய பொருளாளராக எஸ்.பி.ஐயப்பா, வி.கோபி, டி.செங்கைய்யா,சி.பி.முத்துரெட்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஆர்.கே.பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.என்.சண்முகம் தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.நாராயணன், பி.கே.சீனிவாசன், ஜி.ஜெயசங்கர், வி.புவனேஸ்வரி, ஆர்.எம்.கணேசன், கே.சீராளன், ஆ.பெருமாள், ஈஸ்.ஆர்.செங்குட்டுவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்ட  பி.பழனி தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் க.சங்கரன், கோ.நவீகுமார், ஏ.கே.திருவேங்கடம், எ,சுகுணாமூர்த்தி, டி.பெருமாள், பி.வி.பிச்சாண்டி, பி.வெங்கடேசன், டி.டில்லிபாபு ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.   அனைவரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories: