ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும்: உள்துறை செயலாளரிடம் அன்புமணி கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று  உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டியை நேரில் சந்தித்து பாமக  தலைவர் அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி நேற்று, சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டியை சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டை பொறுத்தவரை அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களும் முழுமையாக தடை செய்யப்பட  வேண்டும். அதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும்.

தமிழ்நாட்டில் கடந்த 2016ம் ஆண்டில் தொடங்கி இன்று வரை குறைந்தது 60 முதல் 70 பேர்  ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டிருக்க கூடும். ஆன்லைன் சூதாட்டங்கள் மனித உயிர்களை பறிக்கின்றன. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சீரழித்து நடுத்தெருவுக்கு கொண்டு வருகின்றன என்பது மிகவும் தெளிவாக தெரியும் நிலையில் அவற்றை தடை செய்வதில் அரசுக்கு எந்த தயக்கமும் தேவையில்லை. எனவே, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை, தடை செய்து உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: