திருப்பூர் பின்னலாடை உள்நாட்டு வர்த்தகம், ஏற்றுமதி ரூ.70 ஆயிரம் கோடியை தாண்டியது: ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் பேட்டி

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி ரூ.70 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் தெரிவித்தார். அதிநவீன பின்னலாடை உற்பத்தி மெஷின்களை அறிமுகப்படுத்தும், ‘நிட்ஷோ’ கண்காட்சியை திருப்பூரில் நேற்று துவக்கி வைத்த திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:

20 ஆண்டுகளுக்கு முன்பு பின்னலாடை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி ரூ.5 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால், இன்று ரூ.70 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. சிரமம் என்று முடங்கி இருந்தால், இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெறாது.  ஒவ்வொருவரின் தொடர் முயற்சி இருந்து கொண்டே தான் இருக்கும். அடுத்து பின்னலாடை ஏற்றுமதி ஒரு லட்சம் கோடியை விரைவில் தாண்டும். ஏற்றுமதியை அதிகமாக உருவாக்கி தருவதில் காஞ்சிபுரம், சென்னைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் திருப்பூர் இருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் முதல் இடத்திற்கு திருப்பூர் வந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: