அணுமின் நிலையம் சார்பில் ரூ.57 லட்சம் மதிப்பில் அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம்; இயக்குநர் அடிக்கல் நாட்டினார்

திருக்கழுக்குன்றம்: சென்னை அணுமின் நிலையம் சார்பில், கல்பாக்கம் அடுத்த  சிட்லம்பாக்கம் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு,  ரூ.57 லட்சம் மதிப்பில்  2 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளிக் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான, அடிக்கல் நாட்டுவிழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட   சென்னை அணுமின் நிலைய இயக்குநர்  சுதிர் பாபன்ராவ் ஷெல்கே கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.

சென்னை அணுமின் நிலைய முதன்மை கண்காணிப்பாளர்  செந்தாமராமன், அணுமின் நிலைய சமூக பொறுப்புக்குழு தலைவர் சுபா மூர்த்தி,  அணுமின் நிலைய மருத்துவ அலுவலர் அறவாழி அண்ணல், மனிதவள கூடுதல் பொது மேலாளர்  வாசுதேவன், சமூகப் பொறுப்பு குழு செயலர் ஜெகன் மற்றும் அணுமின் நிலையத்தின் உயரதிகாரிகள் மற்றும் விட்டிலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர்  சுமதி ஏழுமலை, துணை தலைவர் ஞானப்பிரகாசம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்  குப்புசாமி பள்ளி தலைமை ஆசிரியை லட்சுமியம்மாள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: