கேரளாவில் ரயிலில் கடத்திய ரூ.10 கோடி கஞ்சா ஆயில் பறிமுதல்: 2 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் ரயில் நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பு உள்ள கஞ்சா எண்ணெய்  பறிமுதல் செய்யப்பட்டது. கேரளாவில்  ஓணம் பண்டிகை நெருங்கி வருகிறது. ஆகவே, போதைப் பொருள் கடத்தலும் அதிகரித்து  உள்ளது. நேற்று முன்தினம் சென்னை வழியாக  வந்த ஒரு ரயில், பாலக்காடு அருகே உள்ள ஒலவக்கோடு ரயில் நிலையத்தை  வந்தது. அப்போது, ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர்.  

2 பயணிகளின் பைகளை சோதனை செய்தபோது, அதில் 5 கிலோ கஞ்சா எண்ணெய் இருந்தது. அவர்களை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் இடுக்கியை சேர்ந்த அனீஷ் குரியன், ஆல்பின் என்பது  தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எண்ணெயின் மதிப்பு ரூ.10 கோடி.

Related Stories: