நேற்று சிகரெட்; இன்று சரக்கு: சிக்கிய பாடி பில்டர்

டேராடூன்: இன்ஸ்டாகிராம் புகழ் பாடி பில்டர் கட்டாரியா பொதுவெளியில் மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து எக்குதப்பா மாட்டி கொண்டு விழிபிதுங்கி நிற்கிறார். இன்ஸ்டாகிராமில் தனது வீடியோக்களை வெளியிட்டு புகழ் பெற்றவர் பாடி பில்டர் பாபி கட்டாரியா. இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் விமானத்தில் பயணம் செய்தபோது, இருக்கையில் அமர்ந்தபடி சிகரெட் புகைக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கட்டாரியா டேராடூன்-முசோரி செல்லும் சாலையில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ நேற்று வெளியானது. இதில், சாலையின் நடுவில் நாற்காலி போட்டு மது அருந்துவதாகவும் பின்னணியில் ‘சாலைகள் நமக்கு தந்தை’ என்ற அர்த்தம் கொண்ட இந்தி பாடல் ஒலிக்கிறது. அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நேத்து சிகரெட், இன்னைக்கு தண்ணி கேசா என நெட்டிசன்கள் இவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Related Stories: