உச்ச நீதிமன்றம் உத்தரவு: ஹஜ் கமிட்டிகள் பற்றி தகவல் தர வேண்டும்

புதுடெல்லி: ஹஜ் கமிட்டி அமைத்தது தொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘ஹஜ் கமிட்டி சட்டத்தின்படி, ஹஜ் கமிட்டி அமைப்பதிலும், அதற்கான நிதியை பயன்படுத்துவதிலும் சில மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் முறையாக செயல்படவில்லை. இது அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயலாகும்’ என ஹஜ் கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் ஹபிஸ் நவுசத் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் நசீர், மகேஸ்வரி அமர்வு, ‘ஹஜ் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளதா? அப்படியெனில், அதன் உறுப்பினர்கள் யார் என்பது குறித்து அனைத்து மாநிலங்களும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பாக ஒன்றிய வெளியுறவு அமைச்சகம், இந்திய ஹஜ் கமிட்டி உள்ளிட்டோரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்,’ என நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

Related Stories: