இந்தியாவில் 60% யானை: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ‘ஆசியாவில் வசிக்கும் யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில் உள்ளன,’ என்று உலக யானை தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். சர்வதேச யானைகள் தினம் கடந்த 2012ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 12ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் யானைகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் உறுதி ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `உலக யானைகள் தினத்தில், யானையைப் பாதுகாக்கும் நமது நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும். ஆசிய யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் யானைகள் காப்பகங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

யானைகளை பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டுகிறேன். யானைகளை பாதுகாப்பதில் கிடைத்த வெற்றிகள், மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான மோதலைக் குறைப்பதற்கும், உள்ளூர் மக்களை இணைத்து, அவர்களின் அனுபவ அறிவுடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் முயற்சி செய்ய வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: