சாலை விபத்தில் பெண் பலி

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் களியனுர் ஊராட்சியை சேர்ந்தவர் ருத்ரகோட்டி. இவர் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நித்திய ராணி (35). இவர்களுக்கு, இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், நேற்று  காலை வழக்கம்போல் வீட்டின் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது, காஞ்சிபுரத்திலிருந்து களியனுர் நோக்கி பால் ஏற்றி சென்ற  மினிவேன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விஜய ராணி மீது மோதியது. பின்னர், மாடு, நடந்து சென்ற சிவா மற்றும் மாலா ஆகியோர்கள் மீது மோதியது.

இதில், சம்பவ இடத்திலேயே நித்தியராணி இறந்தார். மேலும் சிவா, மாலா ஆகியோர் படுகாயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மினி லாரியை கைப்பற்றியும் நித்திய ராணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: