விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

ஊத்துக்கோட்டை:  ஊத்துக்கோட்டையில் போலீசார் மற்றும் விநாயகர் சிலை அமைப்பாளர்களுக்கான  ஆலோசனைக்கூட்டம்   நடந்தது. விநாயகர் சதுர்த்தி விழா வரும் 31 தேதியன்று  நடக்க உள்ளது.  இதனால் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவது இயல்பு, பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பது  குறித்து இந்து அமைப்பினர் மற்றும் விநாயகர் சிலை அமைப்பாளர்கள், முக்கிய பிரமுகர்களின் ஆலோசனைக்கூட்டம்  ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் நேற்று  நடந்தது.  

இதில், இன்ஸ்பெக்டர் ஏழுமலை  தலைமை தாங்கினார்.  சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன் பிரபாகரன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வரும் 31ம் தேதியன்று  விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை 10 அடிக்குள் வைக்க வேண்டும்.  5 நாட்களுக்குள் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.  சிலை அமைப்பாளர்கள் மின் திருட்டில் ஈடுபட கூடாது.  கட்சி சார்ந்த பேனர்கள் வைக்க கூடாது. விநாயகர் சிலைகளை கரைக்க டிராக்டர்,  மினி லாரிகளில் எடுத்துசெல்ல வேண்டும். கண்டீப்பாக பட்டாசு வெடிக்க கூடாது என கூறினார்.

Related Stories: