தேசபக்தி பாடல் பாடி ராஜஸ்தானில் 1 கோடி மாணவர்கள் சாதனை

ஜெய்ப்பூர்:  ராஜஸ்தானில் பள்ளி மாணவர்கள் ஒரு கோடி பேர் ஒரே நேரத்தில் தேசபக்தி பாடலை பாடி உலக சாதனை படைத்துள்ளனர். ராஜஸ்தானில் சுதந்திர தின பெருவிழா பிரசாரத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் தேசபக்தி பாடல் பாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்றனர். மாவட்ட அளவிலும் வட்ட அளவில் பள்ளி மாணவர்களை திரட்டி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஒரே நேரத்தில் மாணவர்கள் தேசபக்தி பாடல்களை பாடினார்கள். சுமார் 25 நிமிடங்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில் வந்தே மாதரம், சாரே ஜகான் சே அச்சா மற்றும் தேசிய கீதத்தை மாணவர்கள் பாடினார்கள். ஜெய்ப்பூரின் சாவாய் மான்சிங் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் அசோக் கெலாட் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். லண்டனில் உள்ள உலக சாதனை புத்தக நிறுவனம், இந்த சாதனைக்கான சான்றிதழை மாநில அரசிடம் வழங்கியுள்ளது.

Related Stories: