வியாபாரிகள் கொலைவழக்கில் 400 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகை

மதுரை: சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020ல் சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஏற்கனவே சிபிஐ தரப்பில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிபிஐ தரப்பில் 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் துணை குற்றப்பத்திரிகை மதுரை நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories: