போண்டா சாப்பிட்ட நகராட்சி ஊழியர் பலி

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி உளுந்தாண்டார்கோயில் துப்புரவு குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ராஜரத்தினம் மகன் பிரபு (36). இவர் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்யும் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன் பணியின் போது மாலை நேரத்தில், விருத்தாசலம் சாலையில் உள்ள ஒரு கடையில் 2 போண்டா, ஒரு டீ சாப்பிட்டுள்ளார். அதன்பிறகு இரவு அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை பிரபு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: