பிளாஸ்டிக் விற்பனை கடையில் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் எனக் கூறி பணம் பறித்தவர்கள் கைது

சென்னை: பிளாஸ்டிக் விற்பனை கடையில் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் எனக் கூறி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மண்ணடியில் பிளாஸ்டிக் விற்பனை கடைகளில் ரூ.30,000 பணம் பறித்த ராஜேந்திரன் (56), வினோத்குமார் (31) போலீசார் கைது செய்தனர். சுகாதாரத்துறை உயர் அதிகாரி சாந்தகுமாரின் தங்களை அனுப்பியதாகக் கூறி விசிடிங் கார்டை காண்பித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மிட்டாலால் என்பவர் அவர்களை பிடித்து போலீஸில் ஒப்படைத்தார்.

Related Stories: