தேசிய விருது பெற்ற கன்னட பாடகர் மாரடைப்பால் மரணம்

பெங்களூரு: கர்நாடகாவில் தேசிய விருது பெற்ற கன்னட பாடகர் சிவமொக்கா சுப்பனா மாரடைப்பால் மரணமடைந்தார். பிரபல கன்னட பாடகரும், தேசிய விருது பெற்றவருமான சிவமொக்கா சுப்பனாவுக்கு (83) நேற்றிரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர் அவரை ஜெயதேவா மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

‘காடு குதிரை ஓடி பந்தடிடா’ பாடலுக்காக முதன்முதலாக தேசிய விருது பெற்ற சிவமொக்கா சுப்பனாவின் மறைவுக்கு அம்மாநில முதல்வர் பசவராஜ், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இசை உலகில் நுழைவதற்கு முன்பு அவர் வழக்கறிஞராக சிவமொக்கா சுப்பனா பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 6 மாதங்களுக்குள் இந்திய இசை உலகில் பலர் இறந்துள்ளனர். அந்த பட்டியலில் லதா மங்கேஷ்கர், பாடகி கே.கே., பூபேந்திரா, சித்து முசே வாலா போன்ற ஆளுமைகள் பிரியாவிடை பெற்றனர்.

Related Stories: