ரூ.10 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்திய 2 ஆப்பிரிக்கர் உட்பட 6 பேர் கைது

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் மங்கோல்புரி, சுல்தான்புரி, லக்ஷ்மி நகர் ஆகிய இடங்களில் போதைப்பொருள் பதுக்கல், கடத்தல் அதிகமாக இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு அதிரடிப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடங்களில் ‘மாஸ்’ ரெய்டு நடத்திய போதைப்பொருள் தடுப்பு அதிரடிப் படையினர் 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்களும், இரண்டு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்களையும் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த மோசடி வழக்கில் கைதான ஒக்புவாகு என்பவன் மூலம், இந்த கும்பல் போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

Related Stories: