குற்றாலத்தில் நடைபெற்ற வின்டேஜ் கார்களின் கண்காட்சி: நகரம் முழுவதும் அணிவகுத்துச் சென்ற பழங்கால கார்கள்

தென்காசி; தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்ற பழங்கால கார்களின் கண்காட்சி மற்றும் அணிவகுப்பு பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு குற்றாலத்தில் நடைபெற்ற பழங்கால  கார்களின் கண்காட்சியை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மதுவேந்தன் தொடங்கி வைத்தார்.

குற்றாலத்தில் நடைப்பெற்று வந்த சாரல் திருவிழாவின் நிறைவு நாளில் நடைபெற்ற கண்காட்சியில் 1918 மற்றும் 1920-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வின்டேஜ் கார்கள் பங்கேற்றது. சிலியா, டாட்ஜ், ஆஸ்டின், மோரிஸ், பிளைமவுத், மினிகூப்பர் உள்ளிட்ட பழமையான கார்களை மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

தற்போது ஓடும் நிலையில் இருக்கும் அரிய  பழங்கால கார்கள் குற்றாலத்தில் முக்கிய வீதிகள் வழியாக அணிவகுத்து சென்றதில் பார்வையாளர்கள் வியப்புடன் கண்டனர். பழங்கால கார்களின் கண்காட்சியை பங்கேற்றும் பெரும்பாலானா வின்டேஜ் கார்கள் உதகையில் இருந்து பிரத்யேகமாக  குற்றாலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

Related Stories: