×

பொது விநியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவை குறித்து குறைதீர் முகாம் நடத்தப்படும்: அரசு அறிவிப்பு

சென்னை: பொது விநியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் பொருட்டு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

ஆகஸ்ட்-2022 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 13.08.2022 அன்று காலை 10.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை  நகல்  கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளனர்.

நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும் மேலும் பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் முகாமில் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளனர்.

இம்முகாமில் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது தெரிவித்துள்ளனர்.

Tags : Grievance camp, citizen service provided,public distribution scheme, Govt notification
× RELATED பாதிப்பை குறைக்கும் கொரோனா; உலக அளவில்...