வாஷிங்டன் சுந்தர் காயம்

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இடது தோள் பகுதியில் காயம் அடைந்துள்ளார். மான்செஸ்டரில் ராயல் லண்டன் ஒரு நாள் கோப்பை தொடரில் வொர்செஸ்டர்ஷயர் அணிக்கு எதிராக லங்காஷயர் அணிக்காக களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் இடது தோளில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறிய அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் போட்டியில் பங்கேற்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை ஹாம்ப்ஷயர் அணிக்கு எதிரான லங்காஷயர் மோதலுக்குப் பிறகு, வாஷிங்டன் நேரடியாக ஹராரேயில் இந்திய அணியுடன் இணைய வாய்ப்புள்ளது.

Related Stories: