வைரஸை போல தென் கொரியாவையும் ஒழித்துக் கட்டுவோம்: கொரோனாவில் இருந்து மீண்ட வட கொரியா எச்சரிக்கை..!

தங்கள் நாட்டில் திட்டமிட்டே தென் கொரியா கொரோனாவை பரப்பி விட்டதாக வடகொரியா அதிபரின் சகோதரி கிம் யோ ஜங் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலை தொடர்ந்தால் வடகொரியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொரியாவின் கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை என அந்நாட்டு அரசு அறிவித்தது. இது குறித்த நிகழ்வில் பங்கேற்ற அதிபரின் அதிபரின் சகோதரியும் அந்நாட்டின் அதிகாரம் மிக்க நபருமான கிம் யோ ஜங்; தங்கள் நாட்டில் கொரோனா  பரவ அண்டை நாடான தென் கொரியா தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

தென் கொரியாவில் இருந்து அனுப்பப்படும் பலூன் போன்ற பொருட்களின் மூலம் தங்கள் எல்லைக்குள் கொரோனா பரவியதாக தெரிவித்த கிம் யோ ஜங் தொடர்ந்து பலூன்களை அனுப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். கொரோனா வைரஸை ஒழித்துக் கட்டியது போல தென்கொரியா அதிகாரிகளையும் கையாள்வோம் என ஆவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பால் தனது சகோதரரும் அதிபருமான கிங் ஜான் உன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வடகொரியாவின் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததால் கொரோனாவை எதிர்கொள்வதில் அந்நாடு பின்தங்கி இருப்பதாக மருத்துவ உலகம் குற்றம் சாட்டியிருந்த நிலையில் அந்நாடு தற்போது அண்டை நாடு மீது பலி போட்டுள்ளது.

Related Stories: