திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாத உண்டியல் காணிக்கை ரூ.139.33 கோடி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாத உண்டியல் காணிக்கையாக ரூ.139.33 கோடியை பக்தர்கள் செலுத்தியுள்ளனர். திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜூலை மாதத்தில் 23.40 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.139.33 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 1.7 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 10.97 லட்சம் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

மார்ச் மாதத்தில் 19.72 லட்சம் லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து உண்டியலில் காணிக்கையாக ரூ.128.61 கோடியும், ஏப்ரலில் 20.62 லட்சம் பக்தர்கள் ரூ.127.63 கோடியும், மே மாதத்தில் 22.68 லட்சம் பக்தர்கள் ரூ.130.29 கோடியை காணிக்கையாக செலுத்தினர். ஜூன் மாதத்தில் 23.23 லட்சம் பக்தர்கள் ரூ.123.74 கோடி காணிக்கை செலுத்தினர். மே மாத உண்டியல் காணிக்கை ரூ.130.29 கோடி இருந்தது. ஆனால் ஜூலையில் ரூ.139.33 கோடியாக உயர்ந்துள்ளது என்றார்.

Related Stories: