×

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடர் இந்திய அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் நியமனம் ஏன்?..பயிற்சியாளர் டிராவிட்டிற்கு பதிலாக லட்சுமணன்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. முதலாவது ஒருநாள் போட்டி வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோஹ்லி, ரிஷப் பன்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, பும்ரா ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்படுவார் என பிசிசிஐ நேற்றிரவு திடீரென அறிவித்துள்ளது. தவான் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் மற்றும் குடலிறக்கத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட கே.எல்.ராகுல் சொந்த நாட்டில் நடந்த தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான டி.20 தொடர் மற்றும் இங்கிலாந்து தொடரில் விளையாடவில்லை. அண்மையில் நடந்து முடிந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரில் அணியில் இடம்பெற்றிருந்த அவர், கொரோனா தொற்று காரணமாக கடைசி நேரத்தில் விலக நேர்ந்தது.

பிசிசிஐ மருத்துவக் குழு கே.எல்.ராகுல் உடல்திறனை மதிப்பீடு செய்து ஜிம்பாப்வேயில் நடக்கவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட அனுமதித்துள்ளது. ஐபிஎல் தொடருக்கு பின் எந்த ஒரு போட்டியிலும் விளையாடாத ராகுலுக்கு ஆசிய கோப்பை டி.20 தொடருக்கு முன் சில போட்டிகளில் பயிற்சி அவசியம் என்பதால் ஜிம்பாப்வே தொடருக்கு 16வது வீரராக சேர்க்கப்பட்டு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 36 வயதான தவானுக்கு தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

ரோகித்சர்மா, கே.எல்.ராகுல் ஒரே நேரத்தில் அணியில் இருந்தால் தவானுக்கு அந்த வாய்ப்பும் கிடைப்பது அரிதாகிவிடும். எனவே எதிர்காலத்தை கருத்தில்கொண்டு ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்திய கேப்டனாக ராகுல் பதவியேற்பது இது இரண்டாவது முறையாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் போட்டிகளில் அவரது தலைமையில் இந்தியா 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வேக்கு இந்திய அணி 6 ஆண்டுகளுக்கு பின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. கடைசியாக 2016ல் அங்கு சென்று ஆடியது. ஆசிய கோப்பை டி.20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வரும் 20ம் தேதி துபாய் செல்ல உள்ளது. இங்கு 3 நாள் பயிற்சி முகாம் நடக்கிறது. இதனால் ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பணியாற்ற வாய்ப்பு இல்லை. அவருக்கு பதிலாக தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ள விவிஎஸ்.லட்சுமணன் தலைமை பயிற்சியாளராக பணியாற்ற உள்ளார்.

Tags : KL ,Indian ,ODI ,Zimbabwe ,Rahul ,Lakshmanan ,Dravid , KL captained the Indian team for the ODI series against Zimbabwe. Why Rahul appointment?..Lakshmanan instead of coach Dravid
× RELATED டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி