வாக்குசீட்டு முறையிலான தேர்தல் கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் அதிரடி

புதுடெல்லி: வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப் பட வேண்டும் என்றும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் சர்மா என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக பழைய முறையில் பின்பற்றப்பட்ட வாக்குச் சீட்டு முறையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவின்படி 61 (அ) மனு தாக்கல் செய்துள்ளேன். மேலும் பிரிவு 61 (அ) விதிமுறையானது இன்னும்     நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே இதுவரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் நடத்தப்பட்ட அனைத்து தேர்தல்களும் சட்டவிரோதமானவை.  

அதனால் ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்தல்களை வாக்குச் சீட்டு முறையில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்’ என்று கோரியிருந்தார். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, மனுதாரரின் கோரிக்கைகளை நிராகரிப்பதுடன், மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related Stories: