ஆசிரியரிடம் ரூ.1.50 கோடி மோசடி: 2 புரோக்கர்கள் கைது

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பெர்க்மான்ஸ் (65). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் பெட்ரோல் பங்க் வைப்பதற்கு இடம் தேவைப்படுவதாக சில புரோக்கர்களிடம் தெரிவித்துள்ளார். அப்போது புரோக்கர்களான மேலப்பாளையத்தை சேர்ந்த பரித் புகாரி (52), தாழையூத்தை சேர்ந்த துரை (48) ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. இவர்கள் நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை, வடக்கு புறவழிச்சாலையோரம் உள்ளிட்ட பகுதியை ஒட்டி அமைந்துள்ள சில இடங்களை தங்களுக்கு சொந்தமானது என தெரிவித்து அந்த இடத்திற்கு போலி ஆவணங்கள் தயாரித்து பெர்க்மான்சிடம் காட்டினர்.

இதனை நம்பிய அவர், முன் தொகையாக ரூ.1.50 கோடியை பரித் புகாரி, துரை ஆகியோருக்கு வழங்கியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெர்க்மான்ஸ் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மேலும் பரித் புகாரி, துரை ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து  சிறையில் அடைத்தனர்.

Related Stories: