நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை: தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, குமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். ஆக. 13ல் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரம் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. ஆந்திரா, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று பலத்த சூறாவளி வீசக்கூடும். ஆக. 14ல் ஆந்திர கடலோரம், மத்திய மேற்கு வங்கக்கடலில் பலத்த சூறாவளி வீசக்கூடும். ஆக.11, 16ல் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கரையோரத்தில் பலத்த சூறாவளி வீசும். 45-55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: