சிறப்பு உணவுகள்..குளுகுளு அறைகள்!: இங்கிலாந்தில் கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க ஏசி வசதிகளுடன் செல்லப்பிராணிகளுக்கு விடுதிகள்..!!

இங்கிலாந்து: இங்கிலாந்தில் கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க ஏசி வசதிகளுடன் செல்லப்பிராணிகளுக்கு விடுதிகள் தொடங்கப்பட்டிருக்கின்றது. இங்கிலாந்தில் 31 டிகிரி செல்ஸியஸ் அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருவதால் வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் செல்ல பிராணிகள் அவதிப்பட்டு வருகின்றன. அதனை பராமரிக்க முடியாமல் அதன் உரிமையாளர்களும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை சமாளிக்கும் வகையில் லண்டனில் நாய் மற்றும் பூனைகளுக்கு ஏசி வசதியுடன் விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

உடலுக்கு குளிர்ச்சியை தரும் உணவுகள், நடைப்பயிற்சிகள், ஈரமான துணிகள், தனி அறை என நாய்களின் உலகம் களைகட்டி வருகிறது. சிறப்பு உணவுகள், விளையாட்டு பொருட்கள், குளுகுளு அறைகள், பராமரிப்பாளர்கள் என பூனைகள் விடுதியிலும் வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. 200 பூனைகளும், 600 நாய்களும் இந்த விடுதியில் தங்கியிருப்பதாக அதன் காப்பாளர்கள் தெரிவித்தனர். இனி வரும் காலங்களிலும் அதற்கான வசதிகள் மேம்படுத்தப்படும் என்று அவர்கள் கூறினர்.

Related Stories: