மகளிருக்கான இலவச பயண பேருந்து முழுவதையும் பிங்க் நிறத்தில் மாற்றும் பணியை போக்குவரத்துத் துறை தொடங்கியது..!

சென்னை: மகளிருக்கான இலவசம் பேருந்து முழுவதையும் பிங்க்  நிறத்தில் மாற்றும் பணியை போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது.சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இலவச பயணம் என அறிவிக்கப்பட்டது . இதன் பிறகு மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

இருப்பினும் பெண்கள் இலவச பேருந்துகளை அடையாளம் காணும் விதமாக ஆரம்பத்தில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தாலும் , அதில் சிரமம் ஏற்பட்டதாக தெரிகிறது.  இதனால் இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மாநகரப் போக்குவரத்து கழகம்,  பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண பேருந்துகளுக்கு பிங்க் வண்ணத்தை அடித்தது.  பெண்கள் எளிதில் அடையாளம் காணும் விதமாக அரசு பேருந்துகளின் நிறம் மாற்றப்பட்டாலும் , பேருந்துகளின் முகப்பிலும் , பின்புறமும் மட்டுமே பிங்க் நிறம் மாற்றப்பட்டது.

இது இணையதளத்தில் வெகுவான கேலி கிண்டலுக்கு ஆளானது.இந்நிலையில் மகளிருக்கான இலவச பேருந்துகளை முழுமையாக பிங்க் நிறத்திற்கு மாற்றும் நடவடிக்கையில் போக்குவரத்துத்துறை ஈடுபட்டு வருகிறது. பேருந்தின் இருபுறங்களில் மட்டும் பிங்க் பெயிண்ட் அடிக்கப்பட்ட நிலையில், தற்போது முழுமையாக மாற்றம்செய்யப்படுகிறது. இதன் மூலம் கேலி மற்றும் கிண்டலுக்கு அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது

Related Stories: