இடைக்கழிநாடு பேரூராட்சியில் மழைநீர் வடிகால்வாயில் கழிவுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செய்யூர்: இடைக்கழிநாடு பேரூராட்சி இசிஆர் சாலையையொட்டி உள்ள மழைநீர் வடிகால்வாயில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால், மழைக்காலங்களில் மழைநீர் வெளியேறுவதில் தடை ஏற்பட்டுள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் கால்வாயில் உள்ள கழிவுகளை அகற்றவேண்டம் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகாவில் இடைக்கழிநாடு பேரூராட்சி உள்ளது. இப்பேரூராட்சி 21 வார்டுகள் உள்ளன. பறந்து விரிந்துள்ள இந்த பேரூராட்சி பகுதியில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பலர் இங்கு நிலம் வாங்கி குடிபெயர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையோரம் மழைநீர் செல்வதற்காக தோண்டப்பட்ட மழைநீர் வடிகால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு குப்பைகளை கொட்டிவிட்டு செல்கின்றனர்.

இதனால், வடிகால்வாயில் மரக்கழிவுகளை கொட்டுவதால், மழைக்காலங்களில், மழைநீர் வெளியேற வழியின்றி கால்வாயிலேயே தேங்கிவிடுகின்றது. இதனை தொடர்ந்து, அம்மழைநீர் சாலையோரம் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுவதாக பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே, குப்பைகளை கால்வாயில் கொட்டும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பருவ மழை துவங்குவதற்கு முன் கால்வாயில் உள்ள கழிவுகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை  வைத்துள்ளனர்.

Related Stories: