கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் ஊராட்சியில் டவர் அமைக்க எதிர்ப்பு; இடத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கும்மிடிப்பூண்டி:குமமிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் ஊராட்சியில் செல்போன் டவர் அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் ஊராட்சியில் 1000 க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர். இங் பெரும்பாலான பகுதிகளில் தச்சுத் தொழிலை நம்பி தான் இருக்கிறார்கள். அத்தோடு இந்த கிராமத்திலஅரசு பள்ளி கட்டிடம், அங்கன்வாடி, குடியிருப்பு, கோயில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் நடைபெறும் இந்த  இடத்தில் அதிக அதிர்வெண் கொண்ட தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் நடந்தது.

இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் மேற்கண்ட பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படுவதுடன் கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவில் கருச்சிதைவு ஏற்படும் என்பதால் செல்போன் கோபுரம் அமைப்பதை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து நேற்று ஆத்திரம் அடைந்த  மாதர்பாக்கம் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் திடீரென செல்போன் டவர் அமைக்கும் இடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதனால் மாதர்பாக்கம் ஊராட்சியில் சில மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த பாதிரிவேடு போலீசார், மற்றும் வருவாய் துறையினர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அதற்கு பொது மக்கள் உடனடியாக டவர் அமைப்பதை நிறுத்த வேண்டும் என கூறிய பின்னர் கூட்டம் கலந்து சென்றது. பின்னர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: