வேலைக்கு போக சொன்னதால் மனைவியுடன் தகராறு; கணவர் தூக்கிட்டு சாவு

திருவள்ளூர்: ‘வேலைக்கு போங்கள்’என்று மனைவி கூறியதால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். திருவள்ளூர் அருகே மணவாளநகர் குமரன் நகரை சேர்ந்தவர் அன்பரசன் (34). இவர் தனியார் நிறுவன ஊழியர். கடந்த சில மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டிலேயே இருந்ததால் அன்பரசனை மனைவி கண்டித்து உள்ளார். இதன்காரணமாக தம்பதி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 29ம் தேதி அன்பரசன், எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற அவரை சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை முடிந்து அன்பரசன் வீடு திரும்பினார். இதன்பிறகும் தம்பதி இடையே பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த அன்பரசன், நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுசம்பந்தமாக அனுசுயா கொடுத்த புகாரின்படி, மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அன்பரசன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனர்.

Related Stories: