கஞ்சா விற்ற 2 பேர் கைது

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரணை கோட்டைகுப்பம் பகுதியில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தியபோது, கஞ்சா விற்றுகொண்டிருந்த 2 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெரியபாளையம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த சுனில் (20), ஆமிதாநல்லூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பிரவீன் (22) என்பதும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரிய

வந்தது. இவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சா போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பிடிபட்ட இருவரையும் தனிப்படை போலீசார், பெரியபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: