திருத்தணி முருகன் கோயிலில் பட்டு பூணூல் பவித்ர உற்சவம்

திருத்தணி: முருகன் கோயிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பட்டு பூணூல் அணிவிக்கும் பவித்ர உற்சவம் நடந்தது. திருத்தணி முருகன் கோயில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இத்திருத்தலத்தில், ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வரும் அவிட்ட நட்சத்திரத்தில் சுவாமிக்கு பட்டு பூணூல் அணிவிக்கும் பவித்ர உற்சவம் நடந்தது.  

இவ்விழாவை ஒட்டி கடந்த 9ம் தேதி கோயில் வளாகத்தில் கலசம் வைத்து, யாகங்கள் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து, நேற்று ஆவணி அவிட்ட நட்சத்திர முன்னிட்டு கோயில் கதவுகள் மூடப்பட்டு விநாயகர் முருகர் சண்முகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பட்டு பூணூல் சாத்தும் பவித்ர உற்சவம் நடந்தது.  இதனைத் தொடர்ந்து மலைக்கோயிலில் உள்ள குருக்கள் அனைவரும் சுவாமி நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களுக்கும், பூணூல் அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Stories: