கள்ளச்சந்தையில் விற்க வாங்கிய 450 மதுபாட்டில்கள் பறிமுதல்; வாலிபர் கைது

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் அரசு மதுபான கடைகளில், மதுபாட்டில்கள் வாங்கி, கள்ளச் சந்தை மற்றும் அனுமதி பெறாத பார்களில் அதிக விலைக்கு விற்க சிலர்  மது பாட்டில்கள் வாங்கி செல்வதாக திருக்கழுக்குன்றம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.  இதனை தொடர்ந்து, போலீசார் நேற்று நடத்திய சோதணையில், திருக்கழுக்குன்றம் கருங்குழி சாலை பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் வாங்கி சென்ற ஒரு நபரை பிடிட்டனர்.

அவரிடம் நடத்திய, விசாரணையில் மது பாட்டில்களை வாங்கி சென்றவர் தஞ்சாவூரை சேர்ந்த வினித் (21) என்பதும், இவர் இங்கு தங்கி மதுபாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு கள்ள சந்தையில் விற்பதும் தெரிய வந்தது. அவரிடமிருந்து, 450 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வினித் மீது வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

Related Stories: