காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு பிறந்தநாளில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி, பருத்தியூரை சேர்ந்தவர் மணியரசு (36). கோமங்கலம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். அவருக்கு செப்டம்பர் 1ம் தேதி திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயம் செய்தனர். ஆனால் அவர் வேறு ஒரு பெண்ணை விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதை பெற்றோர் ஏற்க மறுத்ததால் மணியரசு விரக்தி அடைந்துள்ளார். நேற்று முன்தினம் தணியரசுக்கு பிறந்த நாள் என்பதால் காதலியுடன் வெளியே சென்று வந்துள்ளார். இரவில் தான் தங்கிய காவலர் குடியிருப்பில், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: