சீனாவில் புதிய வைரஸ் லங்யா: 35 பேர் பாதிப்பு

மெல்போர்ன்: சீனாவில் லங்யா என்ற புதிய வகை வைரஸ் பரவி, 35 பேரை தாக்கியுள்ளது. கொரோனா உள்ளிட்ட வைரஸ்கள் சீனாவில் இருந்துதான் பெரும்பாலும் உருவாகி பரவுகின்றன. இந்நிலையில், இந்த நாட்டில் ‘லங்யா’ என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது. இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றியிருக்கலாம் என அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த வகை வைரசானது தற்போது சீனாவின் ஷான்டாங், ஹெனன் மாகாணங்களில் 35 பேருக்கு பாதித்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு லேசான காய்ச்சல், சோர்வு, இருமல், பசியின்மை, தசை பிடிப்பு, குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் காணப்படும்.

இது நிபா, ஹெண்ட்ரா வைரஸ் வகைகளை சார்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. முதன் முதலாக, ஹென்ட்ரா வைரஸ் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேன்ட் பகுதியில் 1994ம் ஆண்டும், நிபா வைரஸ் வங்கதேசத்திலும் கண்டறியப்பட்டது. லங்யா வைரஸ் நாய் அல்லது ஆடு போன்ற வீட்டு அல்லது எலி வகையை சார்ந்த காட்டு விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்க கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கி இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. இதற்கான மருந்தும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரஸ் பாதித்துள்ளவர்களுக்கு மாற்று மருந்துகள் மட்டுமே வழங்கப்படுகிறது.

* மீண்டும் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ்

இந்தியாவில் சமீப காலமாக கொரோனாவால் பாதித்தவர்களின் மாதிரிகள், டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், புதிதாக உருமாறிய ஒமிக்ரான் வைரசின் பிஏ 2.75 வகை கண்டறியப்பட்டு உள்ளது. இந்தியாவில் தற்போது பெரும்பாலோர் இந்த வகை வைரசால்தான் பாதிக்கப்படுகின்றனர்.

Related Stories: