மாவடு ஃப்ரைடு ரைஸ்

எப்படிச் செய்வது?

மாவடுவை தோலுடன் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு  சூடாக்கி முந்திரி, பச்சைமிளகாய் போட்டு வதக்கி, மாவடு சேர்த்து வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் வதக்கி தயிர், கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்கு வதக் கவும். பிறகு சாதம் போட்டு கிளறி கடைசியில் பொரித்த வெங்காயத்தை சேர்த்து கலந்து இறக்கவும். தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

Related Stories: