×

கிர்ஜியோசிடம் வீழ்ந்தார் நம்பர் 1 மெத்வதேவ்

மான்ட்ரியல்: உலகின் நம்பர் 1 வீரர் டானில் மெத்வதேவை 3வது முறையாக வீழத்திய நிக் கிர்ஜியோஸ், மான்ட்ரியல் ஓபன் 3வது சுற்றுக்கு முன்னேறினார். யுஎஸ் ஓபனுக்கு முன்னோட்டமாக  கனடாவில் நடைபெறும் மான்ட்ரியல் ஓபன் தொடரில் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்கி உள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷ்யாவின் மெத்வதேவ் (26வயது) நேரடியாக களமிறங்கினார். ஆஸ்திரேலியாவின் கிர்ஜியோஸ் (27வயது, 37வது ரேங்க்) உடன் மோதிய அவர் முதல் செட்டை 7-6 (7-2) என டைபிரேக்கரில் வென்று முன்னிலை பெற்றார். எனினும், 6-4, 6-2 என அடுத்த 2 செட்களை கைப்பற்றிய கிர்ஜியோஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இருவரும் இதுவரை 4 முறை மோதியுள்ளதில் கிர்ஜியோஸ் 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Medvedev ,Kyrgios , No. 1 Medvedev falls to Kyrgios
× RELATED 4-வது சுற்றில் மெட்வதேவ் கார்சியா முன்னேற்றம்