சில்லி பாய்ன்ட்...

* யு-20 சாம்பியன்

கொலம்பியாவில் நடந்த உலக யு-20 தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் மும்முறை தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் செல்வா திருமாறன் (வலது), கலப்பு 4X400 மீ. தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற குழுவில் இடம் பெற்ற பரத் ஸ்ரீதர் இருவருக்கும் சென்னை விமான நிலையத்தில் நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பதக்கங்களுடன் இருவரும் உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர்.

* ரஞ்சி உள்பட உள்ளூர் போட்டிகளில் கோவா அணிக்காக விளையாட முடிவு செய்துள்ள இடது கை வேகப் பந்துவீச்சாளர் அர்ஜுன் டெண்டுல்கர் (22 வயது), இதற்காக மும்பை கிரிக்கெட் சங்கத்திடம்அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* சிஎஸ்ஏ டி20 லீக் தொடரில் ‘எம்ஐ கேப் டவுன்’ அணிக்காக விளையாட ரஷித் கான், காகிசோ ரபாடா, லயம் லிவிங்ஸ்டன், டிவால்ட் பிரெவிஸ், சாம் கரன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதே தொடரில் களமிறங்கும் சிஎஸ்கே பிராண்ட் அணியில், தென் ஆப்ரிக்க அணி முன்னாள் கேப்டன் பேப் டுபிளெஸ்ஸி விளையாட உள்ளார்.

* அமீரக டி20 லீக் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திரங்கள் நிகோலஸ் பூரன், கெய்ரன் போலார்டு ஒப்பந்தமாகி உள்ளனர்.

Related Stories: