உபி.யில் படகு கவிழ்ந்து யமுனை ஆற்றில் 20 பேர் மூழ்கி பலி?

பாண்டா: உத்தர பிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 20 பேர் பலியானதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் பாயும் யமுனை ஆற்றில், பதேப்பூர் மாவட்டத்தில் உள்ள மர்காவில் இருந்து ஜராவுலி என்ற இடத்துக்கு நேற்று படகு ஒன்று சென்றது. இதில், 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததாலும், படகில் அதிகம் பேர் ஏற்றப்பட்டு இருந்ததாலும் அது திடீரென கவிழ்ந்தது. இதில் பலர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். முதலில் 2 பெண்கள், குழந்தை உட்பட 4 பேர் மட்டுமே இறந்ததாக தகவல் வெளியானது. பின்னர், 20 பேர் இறந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிலர் நீந்தி கரை சேர்ந்தனர். மற்றவர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: