22ஏ சட்டத் திருத்தத்தில் மாற்றம் பிரதமர், அமைச்சர்களை அதிபரால் நீக்க முடியாது: இலங்கை அமைச்சர் தகவல்

கொழும்பு: இலங்கை நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜப்கசே நேற்று கூறுகையில், ‘இலங்கையின் முன்னாள் அதிபர் தனது விருப்பப்படி பிரதமரையும், அமைச்சர்களையும் பதவி  நீக்கம் செய்யும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள விரும்பினார். அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அரசியலமைப்பின் 22ஏ திருத்த சட்டத்தின் வரைவில் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம், இலங்கை அதிபரால் இனிமேல் பிரதமரையும், அமைச்சர்களையும் தன்னிச்சையாக நீக்க முடியாது. மத்திய வங்கியின் ஆளுநர் பதவி உட்பட அனைத்து உயர் பதவிகளுக்கும் நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற்ற பிறகே அதிபரால் நியமனங்களை செய்ய முடியும். 22ஏ சட்டத்தின்படி, நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக அதிபரே தொடர்ந்து இருப்பார். சில துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை என்றால், 14 நாட்களுக்கு மட்டுமே அத்துறையை அதிபர் கவனிப்பார்,’ என்று தெரிவித்தார்.

Related Stories: