சீன தூதரை அழைத்து இங்கிலாந்து கண்டிப்பு

லண்டன்: அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த 2ம் தேதி தைவான் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து தைவான் ஜலசந்தி பகுதியில் சீனா கடுமையான போர் பயிற்சியில் ஈடுபட்டது. இது நேற்று முன்தினத்துடன் முடிந்தது.

இந்நிலையில், இங்கிலாந்தின் வெளியுறவு, காமன்வெல்த் மேம்பாட்டு துணை அமைச்சர் டிம் பரோ, இங்கிலாந்துக்கான சீன தூதர் செங் ஜீகுவாங்கை நேரில் அழைத்து, சீனாவின் அடாவடி போக்கை கண்டித்ததுடன், தைவான் மீதான அதன் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

Related Stories: