நீல வில்லை விருது நவ்ரோஜியின் லண்டன் வீட்டுக்கு சிறப்பு கவுரவம்

லண்டன்: இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தாதாபாய் நவ்ரோஜி லண்டனில் வசித்த வீட்டிற்கு புளூ பிளேக் அங்கீகாரம் வழங்கப்பட்டு நினைவு இல்லமாகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு வகித்த முக்கிய தலைவர்களில் தாதாபாய் நவ்ரோஜியும் ஒருவர். இவர் தனது வாழ்நாளில் 30 ஆண்டுகள் லண்டனில் வசித்தார். லண்டனில் அனெர்லே பார்க் பகுதியில் அவர் வசித்த வாஷிங்டன் ஹவுஸ்-க்கு இங்கிலாந்தின் புளூ பிளேக் (நீல வில்லை) விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது. அந்த வில்லையில், ‘தாதாபாய் நவ்ரோஜி 1825-1917 இந்திய தேசியவாதி மற்றும் எம்பி இங்கு வசித்தார்,’ என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நாட்டின் 75வது சுதந்திர அமிர்த பெருவிழாவை ஒன்றிய அரசு சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில், தாதாபாய் நவ்ரோஜியின் லண்டன் வீட்டுக்கு இங்கிலாந்து அரசு புளூ வில்லை கவுரவம் வழங்கி. இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.

Related Stories: