இந்திய தீர்மானத்துக்கு சீனா முட்டுக்கட்டை

ஐநா: பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார். மும்பை தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன். இவனின் சகோதரன் அப்துல் ரவுப் அசார், ஜெய்ஸ் அமைப்பின் மூத்த  தலைவனாக செயல்பட்டவன். 2007ம் ஆண்டு ஜெய்ஸ் அமைப்பின் இந்திய தளபதியாக இருந்த அவன், நாட்டின் பல இடங்களில் தற்கொலை படை தாக்குதலை நடத்துவதில் முக்கிய பங்கு வகித்தான். இவனை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து, சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான தீர்மானத்தை, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நேற்று முன்தினம் கூட்டாக கொண்டு வந்தன. ஆனால், கடைசி நேரத்தில் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை நிறுத்தி வைத்தது. 2 மாதங்களுக்கு முன்பம் லஷ்கர் இ தொய்பாவின் தலைவன் ஹபிஸ் சையதுவின் மைத்துனன் அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்காக இந்தியா, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தையும் சீனா நிறுத்தியது.

Related Stories: