இலவச வேட்டி, சேலை உற்பத்தி அரசாணை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான அரசாணையை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி டிவிட்டரில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளில் மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான  வேட்டி, சேலைகளை விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்வதற்கான அரசாணை இன்னும் வழங்கப்படவில்லை.

அதனால் விசைத்தறி நெசவாளர்கள் போதிய வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இலவச வேட்டி,  சேலை தயாரிப்புக்கான  ஆணையை வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி விசைத்தறி சங்கங்களுக்கு வழங்க வேண்டும். அதன் மூலம் விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: