×

தமிழகத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு: அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அவ்வாறு முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்த்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் முகக்கவசம் அணிவதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்றும், மாறாக முகக்கவசம் சுவாச பிரச்சனைஉள்ளிட்ட உடல்நல கோளாறை ஏற்படுத்துவதாகவும் மனுவை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முகக்கவசம் அணியாததால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தது தவறு என்றும், ரூ.500 குறைந்த தொகை அல்ல, இதனால் அந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீசுவர் நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் போதிய ஆய்வுகள் ஏதும் மேற்கொள்ளாமலும், உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமலும் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறி மனு தாரருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Tags : Tamil Nadu , Tamil Nadu Mandatory Face Mask, Case Seeking Cancellation of Ordinance, Dismissed with Penalty
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...