வாஹன் செயலி மூலம் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள எண் பலகைகளின் உண்மை தன்மை அறிய ஒரு நாள் சிறப்பு சோதனை

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், வாஹன் செயலி மூலம் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள எண் பலகைகளின் உண்மை தன்மை அறிய ஒரு நாள் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்து.

சென்னை பெருநகரில் பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவின்பேரில், பல்வேறு பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், வாகன விபத்துக்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு, செயின் பறிப்பு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற நிகழ்வுகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் எண் பலகைகளில் குற்ற நபர்கள் போலியான எண்களை பயன்படுத்தி வருவதால், வாகனங்களின் உண்மை தன்மை அறிவதற்கு சிரமமாகிறது.

ஆகவே, இது போன்ற சிரமத்தை குறைக்க, வாகன எண் பலகைகளின் விவரங்கள் விரைந்து பெறுவதற்காக, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பரிவாஹன் வலைதளத்தின் வாஹன் செயலியின் (Vahan App) மூலம், வாகன எண் பலகையில் உள்ள பதிவு எண்களின் விவரங்கள் பெற்று ஒப்பிட்டு சரிபார்க்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஒரு நாள் சிறப்பு வாகனத் தணிக்கைகள் நடத்த உத்தரவிட்டார்.

அதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (10.08.2022) சென்னையிலுள்ள, முக்கிய சந்திப்புகளில் உள்ள வாகனத் தணிக்கை பகுதிகளில் 2,545 வாகனங்ள், மார்க்கெட் பகுதிகளில் 1,089 வாகனங்கள், குடிசை மற்றும் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் 999 வாகனங்கள் என மொத்தம் 4,633 வாகனங்கள் வாஹன் செயலி மூலம் விவரங்கள் பெற்று வாகனத்தின் ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் குறைபாடுள்ள நம்பர் பிளேட்டுகள் (Defective Number plates) பொருத்தப்பட்டிருந்த சில வாகனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையினரின் இந்த சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், போலியான எண் பலகைகள் பொருத்திய வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: