சேகர் ரெட்டியின் வருமான வரி கணக்கை மறு மதிப்பீடு செய்து புதிய உத்தரவை பிறப்பிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவு: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: வருமான வரியாக 2682 கோடி ரூபாயை செலுத்தும் படி சேகர் ரெட்டிக்கு சொந்தமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் மறுமதிப்பீடு செய்து புதிய உத்தரவை பிறப்பிக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துருக்கிறது.

சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ். ஆர்.எஸ். மைனிங் நிறுவனம் கடந்த 2014 முதல் 2018 ஆகிய மதிப்பீட்டு ஆண்டுகள் வரை  ரூ.384 கோடியே 55 லட்சம் வருமானம் ஈட்டியதாக வருமான வரித்துறை  தாக்கல் செய்தது. ஆனால் 2016-ம் ஆண்டு சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்து அதன் அடிப்படையில் 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில்   எஸ். ஆர்.எஸ். மைனிங் நிறுவனத்துக்கு வருமானமாக ரூ.4,442 கோடி வருமானம் வந்துள்ளதாக தீர்மானித்து அதற்கு வருமான வரியாக ரூ.2,682 கோடி வரை செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து  எஸ். ஆர்.எஸ். மைனிங் நிறுவனம் சார்பில் தாக்கப்பட்ட வழக்கில் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் குறுக்கு விசாரணை செய்யப்படாத சாட்சிகளின் வாக்குமூலங்களை வருமான மதிப்பீட்டுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை உறுதியளித்திருந்தது. ஆனால் அதற்கு முரணாக செயல்பட்டு நீதிமன்றத்துடனும், மனுதராருடனும் கண்ணாம்பூச்சி ஆடுவதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த அனுகுமுறை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள் வருமான வரித்துறையின் உத்தரவை ரத்து செய்து அந்த குறிப்பிட்ட ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை மறுமதிப்பீடு செய்து புதிய உத்தரவுகளை பிறப்பிக்க உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்திருக்கிறது.

Related Stories: