ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனுத்தாக்கல்: இடைகால ஜாமீன் வழங்க கோரிக்கை..!!

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனுத்தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தன்னுடைய தாய் பத்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக்கொள்ள பரோலில் வெளியே வந்த நளினி, காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். தினந்தோறும் காட்பாடி காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வருகிறார்.

தற்போது அவருக்கு நளினிக்கு 7வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனுத்தாக்கல் செய்துள்ளார். தன்னை சிறையில் இருந்து விடுவிக்ககோரிய மனு மீது விசாரணை நடத்தி முடிக்கும் வரை இடைகாலமாக தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனவும் மனுவில் நளினி கோரிக்கை விடுத்துள்ளார். பேரறிவாளன் விடுதலை வழக்கின் தீர்ப்பில் உள்ள அம்சங்களை சுட்டிக்காட்டியே நளினி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தான் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். அந்த அடிப்படையிலேயே நளினியும் விடுதலை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டு, நளினி மீதான குற்றச்சாட்டு, மற்ற ஐவர் மீதான குற்றச்சாட்டு போன்றவை எல்லாம் வேறுபடுத்தி பார்க்கப்படுகிறதா? என்பது நீதிமன்ற விசாரணையில் தெரியவரும். ரவிசந்திரன், முருகன் உள்ளிட்டோரும் இதே காலகட்டத்தில் மனுத்தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

Related Stories: