ரேஷன் கடை, குடிநீர் நிலையம்: திருவள்ளூர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடம்பத்தூர் ஒன்றியம், மப்பேடு ஊராட்சியில் உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தில் திருவள்ளுர்  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரேஷன்  கடை, சிவன் கோவில் தெருவில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் 2 சுத்தரிக்கப்பட்ட குடிநீர் நிலையம், நரசிங்கபுரம் கிராமத்தில் ரூ.20  லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மேல்நிலை  குடிநீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றை வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ திறந்துவைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார்.

முன்னதாக விழாவுக்கு திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி ஜி.சந்திரதாசன், திமுக ஒன்றிய செயலாளர் மோ.ரமேஷ், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் ஆர்.டி.இ.ஆதிசேசன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் சரஸ்வதி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அ.சந்தானம், எம்.ராம்குமார் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பாபு நாயுடு வரவேற்று பேசினார்.

பேரம்பாக்கம் அடுத்த இருளஞ்சேரி  பகுதியில் உள்ள செயின்ட் மேரிஸ் தனியார் மேல்நிலைப்பள்ளியில்   44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவை முன்னிட்டு  செஸ் போட்டி நடைபெற்றது. போட்டியில் 6 முதல் 12ம் வகுப்புகளை சேர்ந்த 110 மாணவர்கள் விளையாடினர். வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, தலைமை ஆசிரியை சகாயமேரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: